‘பீஸ்ட்’ படத்தில் வரும் “ஜாலியோ ஜிம்கானா” பாடலின் நடனத்தை டான்ஸ் மாஸ்டர் மறந்தாலும் சிறப்பாக ஆடி அசத்தும் விஜயின் இந்த வீடியோ ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.

தற்போது விஜய் அவர்கள் தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி படைபள்ளி இயக்கிவரும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இதில் சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

டான்ஸ் மாஸ்டரை விட சிறப்பாக டான்ஸ் ஆடும் விஜய் - ரசிகர்களால் வைரலாகி வரும் வீடியோ.

இந்நிலையில் இப்படத்திற்கு முன்பாக விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் வரும் “ஜாலியோ ஜிம்கானா” என்னும் பாடல் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய் மிகப்பெரிய டான்சர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். 

டான்ஸ் மாஸ்டரை விட சிறப்பாக டான்ஸ் ஆடும் விஜய் - ரசிகர்களால் வைரலாகி வரும் வீடியோ.

அந்த வகையில் பீஸ்ட் படத்தில் வரும் “ஜாலியோ ஜிம்கானா” பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஜானி ஸ்டெப் சொல்லிக் கொடுத்திருந்தார். பின் ஜானி, விஜய் இருவருமே சேர்ந்து அந்த பாடலுக்கு ஆடியிருந்தார்கள். அப்போது டான்ஸ் மாஸ்டர் ஆல் விஜய்யின் வேகத்திற்கு ஆட முடியாமல் ஸ்டேட்ஸ் மறந்து போய் ஒதுங்கிவிட்டார் ஆனாலும் விஜய் விடாமல் நடனம் ஆடி இருந்தார். இந்த வீடியோ பார்த்துள்ள விஜய்யின் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு, ‘டான்ஸ் மாஸ்டரே விஜய் வேகத்துக்கு ஆட முடியாமல் ஸ்டெப்ஸ் மறந்துட்டாரு, ஆனாலும் எங்க தலைவர் விஜய் எப்படி பின்னுறாரு’ என்று உற்சாகத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.