விஜய் ஆண்டனி தயாரிப்பில் ‘பூக்கி’ படம்: ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது ‘பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி அக்கா மகனும் சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில் இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன் பரபரப்பான திரைக்கதையில் ‘பூக்கி’ படம் உருவாகி உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரல் ஆனது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார் இது தொடர்பாக விஜய் ஆண்டனி தெரிவிக்கையில்,

‘நாயகன் கணேசன் அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குனராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.

மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் வரவேண்டும். அந்த வகையில் புதிய பரிதி ஒரு முக்கியமான எழுத்தாளர். அஜய் நல்ல நடிகராக பெரிய இடத்திற்கு வருவார். இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளைக் கொண்டு வரும். இந்த படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவோடு இது பெரிய வெற்றியை பெரும் என்று நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.

 vijay antony produce in movie hero
vijay antony produce in movie hero