Pushpa 2

விஜய் ஆண்டனியின் 25-வது படம் ‘பராசக்தி’; எஸ்.கே.வின் படமும் ‘பராசக்தி’: முழு விவரம்..

சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி நடிக்கும் அவரவர் 25-வது திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்..

சுதா கொங்கரா இயக்கத்தில், ‘எஸ்.கே.25’ படத்திற்கு ‘பராசக்தி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படம் சிவகார்த்தியின் 25-வது படமாகும். இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார்.

இதன் டைட்டில் டீசர் இன்று மாலை ரிலீஸானது. அதில், சேனை ஒன்று தேவை, பெருஞ்சேனை ஒன்று தேவை’ என சிவகார்த்திகேயன் முழங்குகிறார்.

இச்சூழலில், இப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் முன்னரே விஜய் ஆண்டனி தனது 25-வது படத்துக்கு ‘பராசக்தி’ என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

அதாவது, தமிழில் ‘பராசக்தி’ பட டைட்டில் சிவகார்த்திகேயன் கைப்பற்றி விட்டதால், தனது படத்தின் தெலுங்கு டைட்டிலை ‘பராசக்தி’ என வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

அவரின் 25-வது படத்தின் தமிழ் டைட்டில், சக்தித் திருமகன். இப்படத்தை அருவி, வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கி உள்ளார்.

‘சக்தித் திருமகன்’ படத்தில் ஹீரோவாக நடித்து வரும் விஜய் ஆண்டனி, படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். இப்படம், கோடை விடுமுறைக்கு திரைக்கு வருகிறது.

‘சக்தி திருமகன்’ திரைப்படத்தை விஜய் ஆண்டனி தன் மனைவியுடன் சேர்ந்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay antony and sk movie parashakthi in same title