Thumiru Pudichavan New Rekease Date

Thimuru Pudichavan Press Meet : 

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.

கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் முழுக்க வெளியிடும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ் :

விஜய் ஆண்டனி சாருக்கு இது 9வது படம், எனக்கும் இது 9வது படம். அவருடன் இது எனக்கு 4வது படம். திமிரு இருந்தா தான் நம்பிக்கை இருக்கும்.

இந்த பெயரை தலைப்பாக வைக்க ஒரு திமிர் வேண்டும். அது விஜய் ஆண்டனி சாருக்கு இருக்கிறது என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ்.

நடிகர் கதிர்: 

நல்ல சர்கார் அமையணும்னா, திமிரு புடிச்ச அதிகாரிகள் நிச்சயம் தேவை. இந்த தீபாவளி எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலான தீபாவளி என்றார் நடிகர் கதிர்.

சிந்துஜா :

எல்லோரும் பயந்து கண்டுகொள்ளாத ஒரு விஷயத்தை எந்தவித, தயக்கமும் பயமும் இல்லாமல் அதை கையாண்டு முடித்து வைத்தார்.

திருநங்கைகள் வாழ்வில் இந்த படம் முக்கிய திருப்பமாக இருக்கும் என்றார் சிந்துஜா.

டி.சிவா :

தீபாவளிக்கு வெளியாகும் தகுதி இந்த படத்துக்கு நிச்சயம் இருக்கிறது. கடந்த 3 மாத காலமாகவே தமிழ் சினிமாவுக்கு நல்ல நேரம். அதை இந்த படமும் தொடரும் என்றார் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.