அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்துடன் விஜய் நடித்த படம் நேரடி மோதல்

கடந்த ஆண்டு விஜய்யின் ‘கில்லி’ ரீ செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் இருக்கும் பரபரப்பு சூழ்நிலையில், சச்சின் ரீ ரிலீஸ் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால், ‘விடாமுயற்சி’ படத்திற்கு நேர்ந்த சோர்வு ‘குட் பேட் அக்லி’ பேட் லக் ஆகுமோ என கோலிவுட் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

தனுஷ், தனது அக்கா மகன் பவிஷை அறிமுகப்படுத்த இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கூட வருவதை தவிர்த்து விட்டு, தனது ‘இட்லி கடை’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம், ஏப்ரல் 10-ம் தேதி படம் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில், தனுஷின் ‘இட்லி கடை’ மற்றும் விஜய்யின் ‘சச்சின் ரீ ரிலீஸ்’ உள்ளிட்ட படங்கள் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் பாக்ஸ் ஆபீஸுக்கு சிக்கலை உருவாக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘விடாமுயற்சி’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், படத்துக்கு பெரிதாக ஓபனிங் இல்லாத நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தை வாங்க தயக்கம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

ஆனால், புஷ்பா 2 படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு என்பதால் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மிகப்பெரிய ஓபனிங்கை கொண்டு வர பெரிய அளவில் புரமோஷனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபனிங் முக்கியமில்ல, ஃபினிஷிங்தான் முக்கியம். பொறுத்திருந்து பார்ப்போம்.