காதலர் தினத்தில் 10 திரைப்படங்கள் மற்றும் ‘ரீ ரிலீஸ்’ படங்கள் வெளியீடு; முழு விவரம்
வரும் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படவா, 2கே லவ் ஸ்டோரி, தினசரி, ஃபயர், பேபி அண்ட் பேபி உள்பட 10-க்கும் அதிகமான படங்கள் வெளியாகும் நிலையில், காதல் தொடர்பான பழைய படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன.
ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தினசரி பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிந்தியா லூர்து நடித்துள்ளார். இதே போன்று நடிகர் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி ஆகியோரது நடிப்பில் உருவான ‘ஃபயர்’ படம் 1 வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் விமல், சூரி, ஸ்ரீதா ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இது தவிர இன்னும் பல படங்கள்வர இருக்கின்றன. இந்நிலையில், பழைய படங்களும் ‘ரீ ரிலீஸ்’ செய்யப்பட இருக்கின்றன.
விண்ணைத்தாண்டி வருவாயா: கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு-திரிஷா நடிப்பில், காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்த படம் பிப்ரவரி 14-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
சில்லுனு ஒரு காதல்: கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில், காதலை மையப்படுத்திய இந்தப் படமும், காதலர் தினத்தில் ரீ ரிலீஸாகிறது.
மின்னலே: கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமாசென், அப்பாஸ், விவேக் ஆகியோர் நடிப்பில், காலேஜ் மற்றும் காதலை மையப்படுத்திய இந்தப் படமும் வரும் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அப்புறமென்ன, காதலைக் கொண்டாடலாம்.!