Thalapathy 63

Vijay 63 Update :

தளபதி 63 படத்தில் பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. அதே சமயம் மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

வசூலில் பேட்டையை அடித்து தூக்கிய விஸ்வாசம் – அதிர வைக்கும் தமிழக வசூல்.!

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அதே சமயம் நடிகர் கதிர், யோகி பாபு, விவேக் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர்.

இவர்களை தொடர்ந்து ரோபோ ஷங்கரின் மகளும் இப்படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக பல படவாய்ப்புகள் வந்தும் மகளின் படிப்பிற்காக அதையெல்லாம் ரோபோ ஷங்கர் நிராகரித்து வந்துள்ளார்.

தளபதி 63 படத்தில் விஜயுடன் நடிக்க யோகி பாபுவுக்கு இவ்வளவு சம்பளமா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தற்போது விஜய், அட்லீ படம் என்பதால் தன்னுடைய எண்ணத்தை மாற்றி கொண்டுள்ளார். மேலும் ரோபோ சங்கர் அட்லீயிடம் படத்தில் நானும் இருக்கேனா என கேட்டதற்கு அது சஸ்பென்ஸ் என கூறியுள்ளார்.

இதனால் தளபதி 63 படத்தில் ரோபோ ஷங்கரும் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.