Yogi Babu

Yagi Babu Salary : தளபதி 63 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க யோகி பாபு கேட்டுள்ள சம்பளம் ரசிகர்களை அதிர்ச்சியுள்ளக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள காமெடி நடிகர் யோகி பாபு. அஜித், விஜய், சூர்யா என அனைவருடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் சேர்ந்து கோலமாவு கோகிலா படத்தில் இணைந்து நடித்து அவரையே இம்ப்ரெஸ் செய்திருந்தார்.

மேலும் யோகி பாபு இது நாள் வரை ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு ரூ 2 லட்சம் சம்பளமாக வாங்கி வந்தார். சமீபத்தில் தான் அதனை ரூ 3 லட்சமாக உயர்த்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது தளபதி 63 படத்தில் நடிக்க ரூ 80 லட்சம் சம்பளமாக கேட்டுள்ளாராம். இது தளபதி ரசிகர்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தற்போது யோகி பாபுவின் கை வசம் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 19 படங்கள் உள்ளது என்பதும் தர்மபிரபு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.