இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருக்கும் இன்ஸ்டா போஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் கடந்த ஆண்டு தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கும் விக்னேஷ் சிவன் எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து குடும்ப புகைப்படங்கள் மற்றும் சில பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது சென்னை வந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை நேரில் சந்தித்து தனது டி-ஷர்டில் ஆட்டோகிராப் பெற்ற வீடியோவை மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார். மேலும் அதில் “என்னுடைய ஹீரோ, கேப்டன், ரோல் மாடல். நான் மிகவும் நேசிக்கும் மனிதர் தோனி. அவரை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் என் முகத்தில் மகிழ்ச்சியை காண்கிறேன்”. என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.