விதார்த் நடிக்கும் ‘தொடக்கம்’ படத்தின் கதைக்களம்..

பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் நடித்த ‘மைனா’ படம் வரவேற்பு பெற்றது. இதனையடுத்து விதார்த்தின் எதிர்பார்ப்பில் நடிக்கும் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

விதார்த் நடிக்கும் ‘தொடக்கம்’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இந்தப்படம், மனித வாழ்க்கையை வடிவமைக்கும் உறவுகள், உணர்வுகள் மற்றும் நுண்ணிய பாசப்பிணைப்புகளை ஆழமாக ஆராய்கிறது.

நிஜ வாழ்வை ஒட்டிய கதைக்களமும் வலுவான உணர்ச்சி ஆழமும் கொண்ட இப்படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகவுள்ளது. இதில் விதார்த் உடன் சாந்தினி தமிழரசன், எஸ்தர் அணில், ஸ்ரேயா ருக்மணி, கோபராஜு ரமணா, அக்ஷதா மற்றும் கேஷவ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தினை துளசி ராமன் இயக்கவுள்ளார்.

இதன் ஒளிப்பதிவாளராக ஸ்ரீகாந்த், இசையமைப்பாளராக பரத் ஷங்கர், எடிட்டராக வச்சு லக்ஸ்மின் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

vidharth act in thodakkam movie updates
vidharth act in thodakkam movie updates