சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. ‘கருப்பு’ படத்தை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இதன் முழுபடப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘கருப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி முடிவாகாத காரணத்தினால், ‘சூர்யா46’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது ‘சூர்யா46’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.

சூர்யா நடித்துள்ள இப்படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இப்படம் ஓர் அழகான, உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். ஜூலையில் இப்படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

இதன் டீஸர் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நிமிஷ் ரவி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், எடிட்டராக நவீன் நூலி மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை பங்காளன் உள்ளிட்டோர் கவனித்து வருகிறார்கள். சித்தாரா எண்டர்டெயின்மென்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளன. இதன் தமிழக உரிமையை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்று வெளியிடுகிறது.

suriya in vishwanath and sons first look released
suriya in vishwanath and sons first look released