இன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் தான் என்று வெளிப்படையாக சீமான் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் அவர்களின் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வம்சி இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படம் வசூல் வேட்டையாடி வரும் நிலையில் வாரிசு படம் நிகழ்ச்சிகளில் விஜயை சூப்பர் ஸ்டார் என்று நட்சத்திரங்கள் கூறியதால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அளித்திருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம் தான் பட்டையமோ, கல்வெட்டு எழுத்தோ கிடையாது. அந்தந்த காலகட்டத்தில் ஒவ்வொருவர்களாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்கள் அந்த வரிசையில் இந்த தலைமுறையில் விஜய் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்றுக்கொள்ளனும் எதார்த்தம் அது தான் சரத்குமார் சொல்லியது சரிதான். ஏன் ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார் என்றால் உங்களால் ஏன்தாங்க முடியவில்லை? என்ன பிரச்சனை உங்களுக்கு, ரஜினியிடம் கேட்டாலும் அவரும் இதைதான் சொல்லுவார் அதை அவரும் ஏற்றுக்கொண்டார். என்று வெளிப்படையாக பேட்டியில் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.