விடாமுயற்சி படம் பற்றி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வலிமை படத்தினை தொடர்ந்து அடுத்ததாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகியும் இன்னும் படப்பிடிப்புகள் தொடங்காமல் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் இந்த மாதம் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவது உறுதி என தெரிய வந்துள்ளது.

மேலும் ஐதராபாத், வெளிநாடு என மூன்று பிரிவாக இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.