காதலர் தினத்தில் அஜித் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vidamuyarchi Movie First Look Poster Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அர்பன்ஜைனாவில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அங்கு வானிலை மாற்றத்தால் இறுதிகட்ட படப்பிடிப்புகளை சென்னையில் வைத்து படமாக்க உள்ளனர். 

இதுவரை இந்த படத்தின் டைட்டில் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆமாம், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தின ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது. 

அதுமட்டுமின்றி இந்த படத்தை முடித்து விட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ள அஜித் அடுத்தடுத்து படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.