தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. இலங்கையிலும் வசூலில் பட்டையை கிளப்பும் விடாமுயற்சி..!
இலங்கையில் விடாமுயற்சி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் 5 நாட்களில் உலக அளவில் 136 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது விரைவில் 150 கோடியை நெருங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் தற்போது தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இலங்கையிலும் இந்த திரைப்படம் வசூல் வேட்டையாடி வருகிறது என்றே சொல்லலாம். இலங்கை மதிப்பிற்கு 5.25 கோடி வசூல் செய்துள்ளது அது இந்திய மதிப்பில் 1.53 கோடி ஆகும்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
