vettaiyan movie new poster update
vettaiyan movie new poster update

புதிய போஸ்டர் உடன் அப்டேட் ஒன்றை வெளியிட்டது வேட்டையன் படக்குழு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.த. செ. ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் அமிதாப்பச்சன், ராணா,பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஆக புதிய போஸ்டர் உடன் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் “மனசிலாயோ”என்ற இந்தப் படத்தின் முதல் சிங்கள் செப்டம்பர் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் பதிவால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.