நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. என் தங்கை கல்யாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், கிழக்கு சீமையிலே, காலம் மாறிப்போச்சு, போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். மாமன்னன் படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில் பங்களா, கார் உட்பட கிட்டத்தட்ட 150 கோடி சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.