பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார் விசித்ரா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
ஆனால் எட்டாவது சீசனை அவர் தொகுத்து வழங்க முடியாது என்றும் சிறிது ஓய்வு வேண்டுமென்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது விஜய் டிவி.
இந்நிலையில் நேற்று வெளியான ப்ரோமோவில் மக்கள் அவரவர்களின் கருத்துக்களை விஜய் சேதுபதியிடம் சொல்லுவது போல அந்த ப்ரோமோ இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கடந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற விசித்ரா விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார். அதில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு கடந்த சீசனில் ட்ரோல் மற்றும் மீம்ஸ் அதிகமாக வந்தது.சீனியர் நடிகருக்கே அப்படி இருக்கும்போது விஜய் சேதுபதியும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மேலும் தனது மெண்டல் ஹெல்த்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் தனக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டு ஆலோசனைப்படி செய்யலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் மெச்சூடாக பேசுவார் கமல்ஹாசனை போலவே மிக சிறப்பாக தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.