வேட்டையன் : 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா முழு விவரம் இதோ..!

வேட்டையன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியானது.

டிஜே ஞானவேல் இயக்கத்திலும் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் போன்ற பல பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Vettaiyan Movie Box Office Collection Update
Vettaiyan Movie Box Office Collection Update

பிரம்மாண்டமாக வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது இது மட்டுமில்லாமல் 12 நாட்களில் 325 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவரது நடிப்பில் அடுத்ததாக கூலி என்று திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

Vettaiyan Movie Box Office Collection Update
Vettaiyan Movie Box Office Collection Update