Vetrimaran Reveals Secrets of Asuran

அசுரன் படத்தின் சிவசாமி கதாபாத்திரத்தை 4 நடிகர்கள் நிராகரித்ததாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

Vetrimaran Reveals Secrets of Asuran : தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று அசுரன். இந்த படத்தில் தனுஷ் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்திய அரசின் தேசிய விருது இப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டது படக்குழுவினரை உச்சகட்ட மகிழ்ச்சிக்கு கொண்டு சென்றது.

இந்த நிலையில் அசுரன் படத்திற்கு விருது கிடைத்தது குறித்து வெற்றி மாறன் பேசியுள்ளார். தனுஷ் என்னை நம்பி இந்த படத்தில் நடித்தார். இந்தப்படம் மிகப்பெரிய இடத்தைப் பிடித்ததற்கு காரணம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தான்.

இந்த கதை 4 நடிகர்களிடம் சென்று அவர்கள் நிராகரித்த பின்னர் தான் தனுஷ்க்கு வந்தது. கதையைக் கேட்ட தனுஷ் மகன்களாக நடிக்கப்போவது யார் எனக் கேட்டார். கென் தான் இந்த படத்தின் ஆரம்பம். மஞ்சு வாரியர் இந்த படத்தை குடும்பப் படமாக மாற்றினார் என கூறியுள்ளார்.