Verithanam Song Promo Video - Click Here to Watch the Video | Thalapathy Vijay | Nayanthara | Atlee | Bigil Songs | Bigil Movie Video
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்திலிருந்து வெறித்தனம் பாடல் நாளை வெளியாக இருப்பதாக ப்ரோமோவுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Verithanam Song Promo Video : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா, கதிர், யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து சிங்கப்பெண்ணே பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அதேசமயம் ரசிகர்கள் அனைவரும் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடலுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இப்பாடலுக்கான அப்டேட்டை ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட்டுள்ளது படக்குழு.

அந்த ப்ரோமோ வீடியோவில் வெறித்தனம் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது

இதனை தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.