நாளை புதிய அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக வெங்கட் பிரபு ட்விட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் கஸ்டடி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்த அடுத்ததாக தளபதி விஜய் உடன் இணைந்து தளபதி 68 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படம் தொடர்பான அதிகாரவப்புவூர்வமான அறிவிப்பை படக்குழு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது twitter பக்கத்தில் “அடுத்து என்ன? நாளை காலை 11:00 மணி வரை காத்திருங்கள் என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட்டா இருக்குமோ என்ற ஆர்வத்துடன் கமெண்ட் செய்து இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.