தளபதி 68 குறித்து வெங்கட் பிரபு அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதையடுத்து அவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் “தளபதி 68” திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விஜயின் லியோ திரைப்படத்தின் வெளியிட்டுருக்கு பிறகு தொடங்கப்பட்டு 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெங்கட் பிரபுவிடம் செய்தியாளர்கள் ‘தளபதி 68’ படத்திற்காக அஜித் உங்களை வாழ்த்தினாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். அதற்கு வெங்கட் பிரபு, ” ‘தளபதி 68’ படத்திற்கு முதல் வாழ்த்தே நடிகர் அஜித் தான் கூறினார்”. என்று தெரிவித்திருக்கிறார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.