வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி ஏ ஆர் ரகுமான் இசையில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. ராதிகா உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீரஜ் மாதவ் வில்லனாக நடித்துள்ளார்.

மாஸா? கிளாஸா? வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு? - முழு விமர்சனம்

படத்தின் கதைக்களம் :

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரான முத்துவீரன் (சிம்பு) சொந்த ஊரில் இருந்து மும்பைக்கு பிழைக்க வருகிறார். வந்த இடத்தில் இவரை சுத்தி பல விஷயங்கள் நடக்கிறது. அதில் இவர் ரௌடி கும்பலிடம் சிக்கி தப்ப முடியாத அளவிற்கு மாட்டி கொள்கிறார், பிறகு இதனை முத்துவீரன் எப்படி சமாளித்து கடந்து அந்த ஏரியாவில் டான் ஆகிறார் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் :

நடிகர் சிம்பு முத்துவீரன் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவருடைய நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. எமோஷனல் காட்சிகளில் நம்மை மீறி கண்கலங்க வைக்கிறார்.

பாவை என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ள சித்தி இதானி அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சிம்புவுக்கும் அவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

ராதிகா சரத்குமார் சிம்புவின் அம்மாவாக எதார்த்தமான நடிப்பை கொடுக்க முரட்டு வில்லனாக நடிப்பை கொடுத்துள்ளார் நீரவ் மாதவ்.

ஏ ஆர் ரகுமானின் இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்க எடிட்டிங் கனகச்சிதம்.

மாஸா? கிளாஸா? வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு? - முழு விமர்சனம்

தம்ப்ஸ் அப் :

  • 1. படத்தின் கதைக்களம்
  • 2. நடிகர், நடிகைகளின் நடிப்பு
  • 3. இசை
  • 4. இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

1. மெதுவாக நகரும் கதை

2. சில இடங்களில் பொறுமையை சோதிக்கிறது.