ஆதி குணசேகரனாக நடிக்க கூப்பிட்டது உண்மைதான் என வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஆதி குணசேகரான நடிப்பால் மிரட்டி ரசிகர்களை கவர்ந்த வில்லனாக வலம் வந்தவர் மாரிமுத்து.

இவர் நேற்று முந்தினம் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆன நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் எதிர்நீச்சல் சீரியலில் இனி ஆதி குணசேகரனாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அதே சமயம் எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என்ற பேச்சும் ஏழத் தொடங்கியது. சீரியல் குழுவினரும் இதே எண்ணத்துடன் அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் பரவியது.

தற்போது வேல ராமமூர்த்தி தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான், ஆனால் படங்களில் பிசியாக இருப்பதால் சீரியலில் நடிக்க முடியுமா என தெரியவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் நான் அது குறித்து முடிவெடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.