Vasool Raja MBBS Movie Secrets

16 வருடங்களுக்கு பிறகு வசூல் ராஜா படம் உருவான விதம் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார் இயக்குநர் சரண்.

Vasool Raja MBBS Movie Secrets : தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் பிரபு, சினேகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ்.

இந்த படத்தை இயக்குனர் சரண் இயக்க ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இப்படம் வெளியாகி 16 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் இயக்குனர் சரண் படம் குறித்த முக்கிய ரகசியங்களை உடைத்துள்ளார்.

38 வருட திரைப்பயணத்தில் ஒருமுறைகூட ஆச்சி மனோரமாவுக்கு வாய்ப்பு தராத பாரதிராஜா – அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா?

அதாவது ஜெமினி பிலிம்ஸ் மனோகர் என்னிடம் முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என கூறினார். மேலும் கமல் சார் 45 நாள் கால்சீட் விடுத்திருப்பதாக தெரிவித்தார்.

அப்போது தான் நான் தல அஜித்தின் அட்டகாசம் படத்தின் சூட்டிங்கை நடத்திக் கொண்டிருந்தேன். அஜித்திடம் இப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறியதும் கமல் சார் படத்தை மிஸ் பண்ணாதீங்க முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தை முடிச்சிடுங்க.

அப்புறம் அட்டகாசம் படத்தை பார்த்துக்கலாம். நானும் அதற்குள் ஜூ படத்தின் சூட்டிங்கை முடித்து கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்.

அன்று அஜித் மட்டும் ஓகே சொல்லவில்லை என்றால் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் உருவாகி இருக்காது என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.