
பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் பிரபல வார இதழ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயை பற்றி பேசியுள்ளார்.
தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் அவருக்கு வில்லியான வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். முருகாதாஸ் இயக்க சன் பிக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி வெளிவர உள்ளது.
இந்நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் அமைதிக்கு மறுபெயர். படப்பிடிப்பு தளங்களில் எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என கூறியுள்ளார்.
மேலும் நானும் முருகதாஸும் சேர்ந்தா விஜய் சாரை தாறுமாறா கலாய்ப்போம் எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இசை வெளியீட்டு விழாவில் இந்த கதாபாத்திரத்தை வரலட்சுமியை தவிர வேற யாராலும் சரியாக செய்திருக்க முடியாது என கூறியதை என்னால் மறக்கவே முடியாது எனவும் கூறியுள்ளார்.