தளபதி விஜயின் தீ தளபதி பாடலின் ட்ரோல் வீடியோ வைரலாகி வருகிறது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தீ தளபதி பாடலும் காப்பியா… இணையத்தில் வெளியான ட்ரோல் வீடியோ வைரல்.!

இப்படத்தில் தமன் இசையில் வெளியான முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் நேற்றைய தினம் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “தீ தளபதி” பாடல் வெளியானது.

தீ தளபதி பாடலும் காப்பியா… இணையத்தில் வெளியான ட்ரோல் வீடியோ வைரல்.!

சிம்பு பாடியுள்ள இப்பாடல் இணையதளத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நெட்டிசன்கள் இப்பாடல் அனிருத் இசையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “வரவா வரவா” பாடலின் காபி என ட்ரோல் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thee Thalapathy song copy #troll | Thalapathy Vijay | STR | Vamshi Paidipally | Thaman