VRV Teaser : வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேஹா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவாக தான் வருவேன்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
மேலும் ரசிகர்கள் பலரும் டீசருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது டீஸர் குறித்த தகவலை லைகா நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு யூ ட்யூபில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே நவம்பர் 29-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ
Vantha Rajavathaan Varuven Teaser On YouTube from tomorrow morning 1⃣1⃣AM #VRVTeaserOnYouTube #STRRage #SundarCMass #VRVMode ????????????????????
— Lyca Productions (@LycaProductions) November 30, 2018