இப்போ உன் புருஷன் யாரையும் கேட்கிறார்கள் என வனிதா விஜயகுமார் அதனைப் பற்றி பேசியுள்ளர்.

Vanitha Vijayakumar in Emotional Interview : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜய் குமார். இவரின் மூத்த மகள் வனிதா. தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் ராஜ்கிரண் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.

இப்போ உன் புருஷன் யாருன்னு கேட்கிறார்கள்?? வேதனைப்படும் வனிதா விஜயகுமார்

பின்னர் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகன் ஒரு மகள் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவரை விவாகரத்து செய்த இவர் ஆந்திராவை சேர்ந்த தொழிலதபர் ஒருவரை மணந்து கொண்டார். அவருடன் இருந்த குடும்ப வாழ்க்கை மூலமாக ஒரு மகளை பெற்றார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார்.

ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு : அமைச்சர் சேகர்பாபு

மகன் தன் அப்பாவிடம் வளர இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சில மாதங்களிலேயே அவர் குடி காரர் எனக்கூறி பிரிந்தார்.

எனக்கும் Vijay TV-க்கும் சண்டையா? – Actress Vanitha Vijayakumar Press Meet | HD

தொடர்ந்து படங்களில் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் வனிதா. சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலும் தனக்கு மரியாதை குறைந்து அதன் காரணத்தினால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறினார்.

இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து தான் பலரும் தவறாக பேசுகிறார்கள். சமூக வலைதளப் பக்கங்களில் நிறைய தவறு நடக்கிறது. நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால் இப்போது உன்னுடைய புருஷன் யார் என கேட்கிறார்கள் என்று மிகுந்த வருத்தத்துடன் பேசியுள்ளார்.