
சார் ஆரம்பிக்கலாங்களா என விசித்ராவுக்கு பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களின் ஒருவராக வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார்.

மேலும் சக போட்டியாளராக பங்கேற்றுள்ள விசித்ரா ஜோவிகாவின் படிப்பை பற்றி தொடர்ந்து பேசி வருவது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று இருவருக்கும் இடையேயான விவாதம் காரசாரமாக சென்ற நிலையில் விசித்ராவுக்கு பதிலடி கொடுத்து வனிதா வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதாவது ஜோவிகா சரளமாக தமிழ் படிக்கும் வீடியோவை வெளியிட்டு பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கணும்னு பெத்தவங்க எங்களுக்கு தெரியும். தேவையில்லாத அட்வைஸை உங்களிடம் யாரும் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோவை கமலுக்கு டேக் செய்து சார் ஆரம்பிக்கலாங்களா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.