வணங்கான் படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் வணங்கான்.  படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சூர்யாவிற்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து மொத்தமாக வெளியேறினார் சூர்யா. 

இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார். சூர்யா மிஸ் பண்ண படம் என்பதால் படத்தில் மீதான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. 

இப்படியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.