வலிமை படத்தின் டீசர் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Valimai Teaser Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிரதமர் மோடி படத்தை நீக்கக் கோரிய வழக்கு : மனுதாரருக்கு அபராதம்

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள், ஒரு கிளிம்ஸ் வீடியோ, ஒரு மேக்கிங் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அடுத்ததாக டீசரா? 3-வது சிங்கிள் ட்ராக் பாடலா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பலமாக இருந்து வருகிறது.

நான் பேசுனாலே 1000 பிரச்சனை – Director Pa .Ranjith Bold Speech..! | Writer Movie Press Meet

இந்த நேரத்தில் அடுத்ததாக வலிமை படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. பொங்கலுக்கு படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வார இறுதியை வலிமை டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பையும் வெகு விரைவில் எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.