வலிமை படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Valimai Running Time Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் உலகம் முழுவதும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஹூமா குரோஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பெருமளவு கொண்டாட வைத்துள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வலிமை திரைப்படத்தில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 3 மணி நேரம் என சொல்லப்படுகிறது. துல்லியமாக சொல்ல போனால் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என தகவல் கிடைத்துள்ளன. இவ்வளவு நீளமான படமா.. தல தரிசனத்திற்கு தயாராக உள்ளோம் என அஜித் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.