Valimai

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Valimai Movie Release Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டன. சில காட்சிகள் மட்டும் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது. வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் ட்ரெய்லர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட வேண்டும் என அஜித் போனி கபூரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலும் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என படக்குழு தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 50 சதவீத இருக்கையுடன் வெளியிட நேர்ந்தாலும் ரிலீஸில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.