Valimai Movie Release Date
தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வலிமை.

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

இந்த படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதை தவிர்த்து படத்தை பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? ரிலீஸ் தேதி என்ன என்பது பற்றியெல்லாம் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம், 2020-ன் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.