யூடியூபில் வலிமை படத்தில் இருந்து வெளியான அம்மா பாடல் படைத்த சாதனை படக்குழுவினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Valimai Mother Song Record in YouTube : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

படத்தில் ஹீமா குரோஷி, கார்த்திகேயா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து Glimpse வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது.

ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அதன் பிறகு அம்மா பாடல் ஒன்று செகண்ட் சிங்கிள் டிராக்காக வெளியானது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதினார். ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என அனைவரையும் கவர்ந்த இந்த பாடல் யூடியூபில் 51 லட்ச பார்வையாளர்களுடன் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

நடிகர்கள் பட்டம் வெச்சுக்குறதே ஒரு முட்டாள்தனம் – கலாய்த்த Blue Sattai Maran | Anti Indian Movie

மேலும் 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை இந்தப் பாடல் பெற்றுள்ளது.