Valimai First Look Update
Valimai First Look Update

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாராகி விட்டதாக அது எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Valimai First Look Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் தாக்கம் குறைந்து பின்னரே மீண்டும் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என அஜித் கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார். மேலும் போஸ்ட் புரோடக்சன் வேலைகளையும் செய்ய வேண்டாம். இந்த நேரத்தில் யாரும் ரிஸ்க் எடுக்கவேண்டாம் என அஜித் கூறியிருந்தார்.

அஜித் பட வாய்ப்பை தவற விட்ட நடிகை – வருத்தத்துடன் அவரே சொன்ன தகவல்.!

ரசிகர்கள் அனைவருமே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக தான் காத்திருக்கின்றனர். அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியே இது ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.

படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னரே அஜித்தை வைத்து போஸ்டருக்கான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இது பக்காவான 3 போட்டோக்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளனர். அதில் அஜித், வினோத், போனி கபூர் என மூவருக்கும் பிடித்த ஒன்றை தேர்வு செய்து ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்கி விட்டனர்.

கரோனா வைரஸ் தாக்கம் குறைந்து விட்டால் ஜூலை இறுதியில் இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால் இன்னும் தள்ளிப் போகும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.