மூன்று நாட்களில் வலிமை திரைப்படத்தின் பிசினஸ் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

Valimai Bussines Update Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக அன்புச்செழியன் வாங்கியிருந்தார். தமிழக உரிமையை மொத்தமாக வாங்கிய இவர் ஏரியா ஏரியாவாக பிரித்து அதனை விற்பனை செய்யும் வேலையில் இறங்கியுள்ளார்.

பேட்மிண்டன் வேர்ல்டு : இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கலக்கல்; அஸ்வினி கலக்கம்..

படத்தின் பிசினஸ் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இதுவரை இந்த படம் மூன்று இடங்களில் வெற்றி கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நான் இந்த படத்துல ஒன்னுமே பண்ணல – Actor Prankster Rahul Speech | Bachelor Press Meet

அதாவது டிகே எனப்படும் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமையை ராம் பிரசாத் என்ற விநியோகிஸ்தர் வாங்கியுள்ளார். கோயம்புத்தூர் ஏரியா உரிமையை சுப்பையா என்பவர் வாங்கியுள்ளார். இவர்தான் மாநாடு படத்தை கோயம்புத்தூரில் ரிலீஸ் செய்தவர்.

மேலும் சேலம் ஏரியா உரிமையை குமரன் பிலிம்ஸ் என்ற நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அன்புச்செழியன் இடமிருந்து உதயநிதி வலிமை படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அந்த முடிவு கைவிடப்பட்டதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.