Vadivelu Upcoming Movies
Vadivelu Upcoming Movies

வடிவேலு மீண்டும் நடந்த அந்த படங்களின் மூலமாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vadivelu Upcoming Movies : தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக விளங்கி வருபவர் வடிவேலு. படத்தில் சாதாரண வேடம், காமெடி வேடம், குணசித்ர வேடம், ஹீரோ என அனைத்திலும் மாஸ் காட்டியவர்.

இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் உயிர்நாடியாக விளங்குபவர். ஆனால் இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் காரணமாக சங்கருடன் ஏற்பட்ட தகராறால் படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் அடுத்ததாக கமலஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள தலைவன் இருக்கிறான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வடிவேலு நடிக்கவில்லை மேலும் 2 படங்களை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உருவாகிறது பிச்சைக்காரன் 2 – ஆனால் இந்த முறை படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

அதாவது பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ளது.

இந்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் வி இசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.

இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விரண்டு படங்களின் வெற்றிக்கும் வடிவேலுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.

இதனால் இந்த படங்களின் இரண்டாம் பாகத்திலும் வடிவேலு நிச்சயம் இருப்பார். அவருடைய காமெடி ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட்டாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.