வடிவேலு  நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்ற படத்தின் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வைகைப் புயல் என்று அழைக்கப்படும் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் ” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  சுராஜ் இயக்கியுள்ளார்.

வைகைப்புயலின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்?? - வாங்க பார்க்கலாம்.!!

இதனைத்தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இந்த படம்  முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்தப்படத்தை அக்டோபர் மாதம் முடிந்தபின் படத்தை திரையரங்கில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாக  கூறப்படுகிறது.

வைகைப்புயலின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்?? - வாங்க பார்க்கலாம்.!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு கதாநாயகனாக நடித்து  இருக்கும் இந்த “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல மாசான வெற்றி படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.