விஜய் அஜித் பற்றி எழுப்பிய கேள்வி, யோசிக்காமல் பதிலளித்த வடிவேலு. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!
அஜித் ,விஜய் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வடிவேலு.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உச்சத்தை தொட்டவர் வைகைப்புயல் வடிவேலு. காமெடி நடிகராக என் ராசாவின் மனசிலே ,சின்ன கவுண்டர், தேவர் மகன், அரண்மனைக்கிளி, வரவு எட்டணா செலவு பத்தணா, நான் பெத்த மகனே, எல்லாமே என் ராசாதான், காலம் மாறி போச்சு, விரலுக்கேத்த வீக்கம் என பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம்.
அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமில்லாமல் தற்போது மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஜித் விஜய் குறித்து கேட்கப்பட்டுள்ளது.
அதில் முதலில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்ட போதும் “வேறு ஏதாவது பேசுவோம்” என்று சொல்லி இருக்கிறார்.உடனே அஜித்தின் கார் விபத்து குறித்து கேட்ட போதும் யோசிக்காமல் “வேறு ஏதாவது பேசுவோமா” என்று சொல்லி இருக்கிறார் இவரின் இந்த பதில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.