வாத்தி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த மாதம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியான இப்படம் கல்வியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் அற்புதமாக உணர்த்தியுள்ளது.

ரசிகர்களால் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டுள்ளது. தற்போது இப்படம் Netflix தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

YouTube video