வாடிவாசல் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்திருக்கும் அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்து இருந்ததை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படம் வாடிவாசல். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்கள் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ‘ உங்கள் எண்ணம் பூர்த்தியாகும், உலக தமிழர்களுக்கு ஒரு விடியல் வாடிவாசல், இந்தப் படம் உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு சிறப்பான இடத்தை பிடிக்கும். இது உலக தமிழர்கள் எல்லாம் உச்சம் பெறக்கூடிய படமாக இருக்கும்’ என தெரிவித்து புகழ்ந்து பேசியுள்ளார். இந்த அப்டேட் தற்போது சூர்யாவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.