தனுஷ் குரலில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தி’ பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருந்த வாத்தி திரைப்படம் வெளியானது.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருந்தா இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வா வாத்தி பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பட்டி தொட்டி எங்கும் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இதுவரை பிரபல பாடகி ஸ்வேதா மோகன் குரலில் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த பாடல் தற்போது தனுஷ் குரலிலும் உருவாக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு சில மாற்றங்களுடன் வெளியாகி இருக்கும் இப்பாடலின் வீடியோ தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு இணையதளத்தில் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

YouTube video