சூப்பர் ஹிட்டடித்த மகான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Mahaan Movie : தமிழ் சினிமாவின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மகான். இந்த படத்தில் பாபி சிம்ஹாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அமேசான் பிரைம் விடியோவில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் நன்றி கூறி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பாபி சிம்ஹா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது தெரியவந்துள்ளது.

ஆமாம் இவருடைய வேடத்தில் முதலில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தான் நடிக்க இருந்துள்ளார். படத்தின் கதை பிடித்து அவரும் ஓகே என்று சொல்லி விட்ட நிலையில் சில காரணங்களால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய் விட இது வாய்ப்பு பாபி சிம்ஹாவிற்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.