தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்று தீனா.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படம் அஜித்தின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது. ஆனால் இந்த படத்தின் கதையை முழுவதாக முதலில் தளபதி விஜய்யிடம் தான் சொன்னார் என ஏற்கனவே தகவல் ஒன்றை வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது தீனா படத்தில் முதலில் வேறொரு நடிகர் தான் நடிக்க இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது. ஆமாம் அவர் வேறு யாருமில்லை அப்போது டாப் ஸ்டாராக வலம் வந்த பிரசாந்த் தான்.

முருகதாஸ் தீனா படத்தின் கதையை சொன்ன போது அவர் பல்வேறு படங்களில் நடித்து வந்த காரணத்தினால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என நடிகர் பிரசாந்தின் தந்தையும் இயக்குனருமான தியாகராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.