கஜினி படத்துக்கு அஜித் நோ சொன்னதற்கான காரணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இறுதியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அஜித் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கஜினி படத்தில் நடிக்க நோ சொன்னதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக மிரட்டல் என்ற பெயரில் கஜினி படத்தை அஜித்தை வைத்து இயக்க இருந்தார்.

அஜித், அசின் கூட்டணியில் இந்த படம் உருவாக உள்ளது என அறிவிப்பு வெளியாகி படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கிய நிலையில் சஞ்சய் ராமசாமி வேடத்தில் மொட்டை அடித்து தழும்புடன் நடிக்க மாட்டேன் என அதில் விலகியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னரே இந்த படம் சூர்யாவிற்கு சென்றது என்று தகவல்கள் பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.