வரலட்சுமி வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தில் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இந்த படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வந்த இவர் சண்டக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் வில்லியாகவும் நடித்து மிரட்டினார். 

இந்த நிலையில் கடந்த மாற்று ஒன்றாம் தேதி இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்சி தேவ் என்பவருக்கும் நிச்சயம் நடைபெற்றது. ஆர்ட் கேலரி தொழிலதிபரான இவருக்கு தற்போது 41 வயது ஆகிறது. 

15 வருடங்களுக்கு முன்னரே கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்து விட்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

நிக்கோலாய் சச்சிதேவ் திருமணம் செய்து விவாகரத்து செய்த கவிதா கலிபோர்னியா நாட்டின் உலக அழகியாக வலம் வந்தவர் எனவும் தெரிவித்துள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.