மாவீரன் திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை பதிவின் மூலம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழும் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாகயுள்ளது.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் படத்தின் முதல் விமர்சனமாக நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தம்சப் இமேஜ்களை பதிவிட்டு படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்திருக்கிறார். இவரது இந்த ட்விட்டர் பதிவை ரசிகர்கள் லைக் செய்து ட்ரெண்டிங்காகி வருகின்றனர்.